செங்கம் அருகே யானைகூட்டங்கள் இன்று ரோட்டில் மாம்பழம் ஏற்றிவந்த மினி லாரியை மடக்கி மாம்பழம் சாப்பிட்டதால் பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.
செங்கம் அடுத்த மேல்செங்கம் அரசங்கண்ணி ஆகிய பகுதிகளில் 5 நாட்களாக் 6 யானைகள் கொண்ட கூட்டம் சுற்றித்திரிந்து வருகிறது. இந்நிலையில் இரவு நேரங்களில் யானைக்கூட்டங்கள் அங்குள்ள விலைநிலங்களில் இரங்கி தண்ணீர் குடிப்பது பயிர்களை சேதப்படுத்துவது என தொடர்ந்து விவசாயிகளை பீதியடையவைப்பதுடன் பயிர்களை நாசம் செய்து வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுகு முன் அரசங்கண்ணி கிராமத்தை சேர்ந்த சடையன் என்பவரி பசு மாட்டை மிதித்துள்ளது. அதில் பசுமாடு பரிதாபமாக இறந்தது. பின்னர் வனத்துறையினர், பொதுமக்கள் என இரவு நேரத்தில் தீபந்தங்கள் ஏற்றியும், பட்டாசுகளை வெடித்தும் யானைகூட்டங்களை கண்காணித்து விரட்டி வந்தனர்.
அதைதொடர்ந்து இன்று அதிகாலையில் ஆனந்தவாடி காட்டுப்பகுதியில் யானை கூட்டங்கள் திருவண்ணாமலை-பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலைய கடந்துள்ளது. அப்போது ஊத்தங்கரையில் இருந்து திருவண்ணாமலைக்கு மினி லாரியில் மாம்பழம் ஏற்றிவந்துள்ளர். மாம்பழம் வாசனையை மோப்பமிட்ட யானைகூட்டங்கள் நடுரோட்டில் நின்றுள்ளது. இதைபார்த்த மினிலாரி டிரைவர் வாகனத்தை நிறுத்திவிட்டு காட்டுபகுதியில் ஒடியுள்ளார். பின்னர் யானைகள் நடுரோட்டில் நின்று லாரியில் இருந்த அனைத்து மாம்பழங்களை சாப்பிட்டு சென்றது. இதனால் அப்பகுதியில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகி உள்ளது. பின்னர் அப்பகுதியில் விவசாயி பன்னீர், காளிசாமி ஆகியோர் நிலத்திற்கு சென்று அங்கு கட்டிவைத்திருந்த பசுமாடுகள் இரண்டை மிதித்துகொன்று சுமார் 5 ஏக்கர் கரும்பு பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. இதனால் யானை கூட்டங்கள் காட்டுபகுதியில் விரட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென கிராம மக்கள் எதிர்பார்கிறார்கள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பழனியில் 2 அரசுப் பேருந்துகள் ஜப்தி

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

மாணவியை கத்தியால் வெட்டியவா்களை கைது செய்ய வலியுறுத்தி மீஞ்சூா் காவல் நிலையம் முற்றுகை
சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவா் கைது
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

