மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவுதமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

தகவல் கேட்பவர்கள் ஆணையத்தை அணுகும் நிலையை உருவாக்ககூடாது: மாநில தகவல் ஆணையர்

கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த தகவல் அலுவலர்களுகான பயிலரங்கம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர் அரங்கில் அண்மையில் நடந்தது. ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் தலைமை வகித்தார். பயிலரங்கில் தகவல் அளிக்கும் அலுவலர்களுக்கு தகவல்

Updated On :20 மே 2013, 10:03 am

தகவல் கேட்பவர்கள் ஆணையத்தை அணுகும் நிலையை அதிகாரிகள் உருவாக்ககூடாது என மாநில தகவல் ஆணையர் சரோஜா தெரிவித்தார்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த தகவல் அலுவலர்களுகான பயிலரங்கம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர் அரங்கில் அண்மையில் நடந்தது. ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் தலைமை வகித்தார். பயிலரங்கில் தகவல் அளிக்கும் அலுவலர்களுக்கு தகவல் பெறும் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் குறித்து விளக்கப்பட்டது.

இதில் மாநில தகவல் ஆணையர் சரோஜா பேசியதாவது, தகவல் கேட்பவர்களுக்கு தகவல்களை குறிப்பிட்ட தினங்களுக்குள் அளிக்க வேண்டும். மேல்முறையீடு செய்யும் தகவல் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலகத்திலேயே முடிவு செய்ய வேண்டும். தகவல் கேட்பவர்கள் ஆணையத்தை அணுகி பெற வேண்டும் என்ற நிலையை தவிர்த்தால், சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டிய தேவை ஏற்படாது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.