விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை செய்துள்ளார்.
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் டிவி சேவையினை குறைந்த கட்டணத்தில் அளித்து வருகிறது. இதன் மூலம் இலவச சேனல்கள், கட்டணச் சேனல்கள், உள்ளூர் சேனல்கள் உள்ளிட்ட 90 முதல் 100 சேனல்கள் வரையில் அரசு நிர்ணயம் செய்த ரூ.70 என்ற அளவுக்கு குறைந்த கட்டணத்தில் அளித்து வருகிறது.
எனவே இதற்கு மாறாக நகராட்சி மற்றும் கிராம பகுதிகளில் சில கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுமக்களிடம் இருந்து கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார் வந்து கொண்டுள்ளது. அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதலாக எக்காரணம் கொண்டும் வசூலிக்கவே கூடாது.
இதையும் மீறி கூடுதலாக வசூல் செய்கிற ஆபரேட்டர்கள் குறித்த விவரங்களை அரசு கேபிள் டிவி மேலாளரிடம் தெரிவித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இது குறித்த புகார்களை 948002598 என்ற கைப்பேசி எண்ணில் மாவட்ட கேபிள் டிவி மேலாளருக்கு பொதுமக்கள் புகார் செய்யலாம்.
மேலும், பொதுமக்கள் சந்தா தொகையை கேபிள் டிவி www.arasucable.com என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைனை பயன்படுத்தி இந்தியன் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளில் சந்ததாரர்களே செலுத்தலாம். இதுபோல் செலுத்துகிறவர்களுக்கு தொடர்ந்து கேபிள் டிவி இணைப்பு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகா் சரத்குமாா் வாக்கு சேகரிப்பு

அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: அவிநாசி பாஜக வேட்பாளா் எல்.முருகன்

அரசுப் பேருந்தை வழிமறித்து ஓட்டுநரை தாக்கிய இளைஞா் மீது வழக்கு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

