ராஜீவ்காந்தியின் 22ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள இராஜீவ்காந்தியின் நினைவிடத்தில் தமிழ்நாடு கங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் உள்ளிட்ட தலைவர்கள் இன்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். மறைந்த முன்னாள் பாரத பிரதமர் இராஜீவ்காந்தியின் 22ம் ஆண்டு நினைவு தினயொட்டி ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், மத்திய அமைச்சர் கே.எச்.முனியப்பா, பாக்கிஸ்தான் சிறையில் படுகொலை செய்யப்பட்ட சரப்ஜித்சிங்கின் சகோதரி தல்பிர்கவுர், அவரது மகள் சுவப்பனாதீப், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு, எம்பிக்கள் ஜே.எம்.ஆரூண், விஸ்வநாதன், மானிக்தூகூர், ராமசுப்பு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யசோதா, வசந்தகுமார், செல்வபெருந்தகை, இராஜீவ் காந்தி நினைவிட சீரமைப்பு குழு உறுப்பினர் முருகானந்தம், மாவட்ட காங்கிரஸ் தலைவர் சக்கரபாணி,வட்டார காங்கிரஸ் தலைவர் வேலு, நகர காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ், உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இராஜீவ்காந்தியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து கர்நாடக மாநில காங்கிரஸ் தெழிற்சங்க தலைவர் பிரகாசம் தலைமையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து ராஜீவ்ஜோதி கொண்டு வரப்பட்டது. இந்தஜோதி இங்கிருந்து கொண்டு செல்லப்பட்டு டெல்லியில் உள்ள அவரது சமாதியில் ஓப்படைக்கப்படவுள்ளது. மேலும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து மணிரத்தினம் தலைமையில் ஜோதி மோட்டார்சைக்கிள் மூலமாக ஜோதி கொண்டுவரப்பட்டு ராஜீவ்காந்தி நினைவிடத்தில் வைக்கப்பட்டது. இதையடுத்து இராஜீவ் காந்தி நினைவிடத்தில் சர்வ மத பிரார்தனை நடைபெற்றது. மேலும் தீவிரவாத எதிர்ப்பு உறுதி மொழியும் காங்கிரஸ் தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர்.
தீவிரவாத எதிர்ப்பு உறுதி மொழி எடுத்துக்கொண்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகள் பேசுகையில் இந்தியாவை 21ம் நூற்றாண்டிற்கு அழைத்து செல்ல பெரும் பாடுபட்டவர் அமரர் ராஜீவ்காந்தி, அறிவியல்,கண்ணி மற்றும் தொலைதொடர்பு துறைகளில் இந்தியாவை வளர்ச்சியடையும் மிகவும் பாடுபட்டார். பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை கொண்டுவந்து அதன் மூலம் பெண்களுக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு பெற்று தந்தவர் ராஜீவ்காந்தி. சிங்களராணுவத்தினர் யாழ்பானத்தை சுற்றிவளைத்து தமிழர்களை தாக்கிய போது அங்குள்ள தமிழர்களுக்கு இந்திய விமானப்படை மூலம் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கியவர் ராஜீவ்காந்தி. அப்போது இலங்கை ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் 5000 பேரை விடுதலை செய்ய உதவினார். இப்படியெல்லாம் இலங்கை தமிழ்களுக்காக பாடுபட்ட தலைவர் ராஜீவ்காந்தியை ஒரு சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர். இப்படி தலைவர் ராஜீவ்காந்தி மீது அவதூறாக பேசி வருபவர்களை காங்கிரஸ் கட்சி முழு சக்தியோடு எதிர்கொள்ளும், எந்த கொம்பனாலும் காங்கிரஸ் கட்சியை வீழ்தி விடமுடியாது என பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.