இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

அம்பாசமுத்திரத்தில் ஜமாபந்தி நிறைவு: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி அளிப்பு

அம்பாசமுத்திரத்தில் வருடாந்திர கணக்கு முடிப்பு நிகழ்ச்சி (ஜமாபந்தி) வியாழக்கிழமை நிறைவு பெற்றது. இதையொட்டி பயனாளிகளுக்கு பட்டா, ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :23 மே 2013, 12:59 pm

ஷேக் அப்துல்காதர்

அம்பாசமுத்திரத்தில் வருடாந்திர கணக்கு முடிப்பு நிகழ்ச்சி (ஜமாபந்தி) வியாழக்கிழமை நிறைவு பெற்றது. இதையொட்டி பயனாளிகளுக்கு பட்டா, ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அம்பாசமுத்திரம் வட்டத்தில் ஜமாபந்தி இம்மாதம் 9 ம் தேதி தொடங்கியது.  இந்த வட்டத்தில் அம்பாசமுத்திரம், சிங்கம்பட்டி, ஆழ்வார்குறிச்சி, பாப்பாக்குடி, சேரன்மகாதேவி, மேலச்செவல், கடையம் உள்ளிட்ட 8 குறுவட்டங்களுக்கு உட்பட்ட கிராமங்களின் கணக்குகளை ஜமாபந்தி அலுவலரும், சிறப்புத் திட்ட சார் ஆட்சியர் ரவி ஆய்வு செய்தார்.

 பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 1150 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிறைவு நாளான வியாழக்கிழமை பயனாளிகள் 20 பேருக்கு வீட்டுமனைப் பட்டா, 18 பேருக்கு முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான அரசாணை, 8 பேருக்கு தலா ரூ. 10,000 வீதம் நலந்தோர் உதவித் தொகை, அம்பாசமுத்திரம் அருகே இடைகாலி்ல் பாம்பு கடித்து இறந்த மாடசாமி என்பவரின்

குடும்பத்திற்கு நிவாரண உதவித் தொகை ரூ. 1,02,500 மற்றும் விபத்து நிவாரண உதவித் தொகை ஆகியன வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் வட்டாட்சியர் ரா. சரஸ்வதி, சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சங்கரநாராயணன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் அருணாசலம், கூடுதல் துணை வட்டாட்சியர் பார்கவிதங்கம், துணை வட்டாட்சியர்கள் முகம்மதுகாசிம், பட்டமுத்து, மோகன், வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், கிராம நிர்வாக அலுவலர்கள் சட்டநாதன், பட்டு, தானப்பன் உள்ளிட்டோர் கலந்து

கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.