தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

விமரிசையாக நடந்த வீரத்தானேஸ்வரர் கோயில் தேர் திருவிழா

கடந்த 8 ஆண்டுகளுக்குப் பின்னர் வீரத்தானேஸ்வரர் கோயில் தேர் திருவிழா இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.

News image
Updated On :23 மே 2013, 6:28 am

சீனிவாசன்

கடந்த 8 ஆண்டுகளுக்குப் பின்னர் வீரத்தானேஸ்வரர் கோயில் தேர் திருவிழா இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.

பண்ருட்டி அருகே திரு அதிகையில் வரலாற்றுப் புகழ்பெற்ற திரு வீரத்தானேஸ்வரர் உடனுறை பெரியநாயகி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத பெருவிழா விமரிசையாக பத்து நாட்கள் கொண்டாடப்படும். 9 வது நாள் தேர் திருவிழா நடைபெறும்.

ஆனால் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கோயில் திருப்பணி நடந்ததாலும், அதன்பிறகு குடமுழக்கு நடைபெறாததாலும், திருத்தேர் பழுதானதாலும் 8 ஆண்டுகளால் வைகாசி திருவிழா நடைபெறாமல் இருந்தது.

அண்மையில் இக்கோயிலில் குடமுழக்கு நடைபெற்றதை அடுத்து, கோயில் திருவிழாக்கள் காலமுறைப்படி நடந்து வந்தன. அதன்படி வைகாசி பெருவிழாவான 10 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வந்தது. 9ம் நாளான இன்று காலை 9.30 மணியளவில் திருத்தேர் விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த விழாவில், சட்டப்பேரவை உறுப்பினர் குறிஞ்சிப்படி, சொரத்தூர் ரா. ராஜேந்திரன், நெய்வேலி எம். பி., எஸ். சிவசுப்ரமணியன், பண்ருட்டி நகர மன்றத் தலைவர் பி. பன்னீர்செல்வம், கோயில் செயல் அலுவலர் நாகராஜன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.