தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பண்ருட்டி மணல்குவாரியை முற்றுகையிட முயன்றவர்கள் விரட்டியடிப்பு

பண்ருட்டியில் மணல் குவாரியை முற்றுகையிட முயன்றவர்களை காவல்துறையினர் விரட்டியடித்தனர்.

News image
Updated On :23 மே 2013, 5:45 am

சீனிவாசன்

பண்ருட்டியில் மணல் குவாரியை முற்றுகையிட முயன்றவர்களை காவல்துறையினர் விரட்டியடித்தனர்.

பண்ருட்டி கண்தர கோட்டையில், தென்பேண்ணை ஆற்றில் மணல் குவாரி இயங்கி வருகிறது.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் சின்னக் கள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 4 லாரிகளில்  மணல் எடுத்துக் கொண்டு சென்றனர். அப்போது அப்பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த விழுப்புரம் மாவட்ட கோட்டாட்சியர் ஆய்வு செய்ததில் அனுமதி சீட்டு இல்லாமல் மணல் எடுத்துச் செல்வதாகக் கூறி வாகனத்தை பறிமுதல் செய்தார்.

இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட லாரி உரிமையாளர்கள், உங்கள் குவாரிகளில் தானே மணல் எடுத்துச் சென்றோம். எனவே நீங்கள் தான் முயற்சி செய்து லாரிகளை மீட்டுத் தர வேண்டும் என்று கூறினார். ஆனால் அதற்கு குவாரி நிர்வாகத்திடம் சரியான பதில் இல்லை.

இதையடுத்து சின்னகள்ளிப்பட்டு கிராமத்தினர் 25 பேர் இன்று மணல் குவாரியை முற்றுகையிட்டு மணல் எடுக்க விடாமல், லாரிகளை மீட்டுக் தரக் கோரி  போராட்டம் நடத்த முயன்றனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து பண்ருட்டி டிஎஸ்பி கிருஷ்ணசாமி தலைமையில் காவல்துறையினர் முற்றுகையிட்டவர்களை விரட்டியடித்து அதில் 6 பேரை மட்டும் கைது செய்து புதுப்பேட்டை காவல்நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.