ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

அண்ணாமலைப் பல்கலை: நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 30 வரை நீட்டிப்பு

மாணவர்கள் நலன் கருதி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நுழைவுத்தேர்விற்கான விண்ணப்ப விற்பனையும், பூர்த்தி செய்து விண்ணப்பங்களை அனுப்பி வைக்கவும் மே.30ம் தேதி வரை தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தால்மீனா ஐஏஎஸ் தெரிவித்தார்.

News image
Updated On :27 மே 2013, 7:37 am

ஜி.சுந்தரராஜன்

மாணவர்கள் நலன் கருதி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நுழைவுத்தேர்விற்கான விண்ணப்ப விற்பனையும், பூர்த்தி செய்து விண்ணப்பங்களை அனுப்பி வைக்கவும் மே.30ம் தேதி வரை தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தால்மீனா ஐஏஎஸ் தெரிவித்தார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழகஅரசால் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்று பணியாற்றி வரும் நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2013-14 கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., பிபிடி., பிஎஸ்சி நர்சிங்., பிஇ., பிஎஸ்சி விவசாயம், பிஎஸ்சி தோட்டக்கலை படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு ஜூன் 7,8,9 தேதிகளில் அண்ணாமலைநகர், சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி, திருச்சி ஆகிய 7 மையங்களில் நடைபெறவுள்ளது. இதற்கு விண்ணப்பங்கள் பெறவும், விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அளிக்கவும் கடைதி தேதி மே 28-ம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை மாணவர்களிடமிருந்து 8598 விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளது. கடந்த சில தினங்களாக மாணவர்களிடமிருந்து அதிகப்படியாக விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளதை அடுத்து, நுழைவுத்தேர்வு விண்ணப்பங்கள் விற்பனை மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்புவதற்கான கடைசி தேதி மே 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும் இந்த ஆண்டு நுழைவுத்தேர்விற்கு மாணவர்களுக்கு ஆப்டிக்கல் மார்க்கிங் சிஸ்டம் மூலம் விடைத்தாள்கள் வழங்கப்படவுள்ளது. இந்த தாளில் மாணவர்கள் கருப்பு மற்றும் நீலம் கலர் பால் பாயிண்ட் பேனா மூலம் மார்க் செய்ய வேண்டும். மேலும் மாணவர்கள் அனுப்பியுள்ள விண்ணப்பத்திலிருந்து புகைப்படம் மற்றும் கையெழுத்தை எடுத்து, புகைப்படம் மற்றும் கையெழுத்துடன் ஹால் டிக்கட் அனுப்பப்படுகிறது. ஹால் டிக்கட் கிடைக்கப் பெறாதவர்கள் குறிப்பிட்ட மையத்திற்கு தேர்வு நாளுக்கு முன் தினம் சென்று, அங்கு அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தில் தாங்கள் விண்ணப்பித்த விண்ணப்பத்தின் நகலை காண்பித்து டூப்ளிகேட் ஹால் டிக்கட் பெற்று தேர்வு எழுதலாம். இந்த புதிய முறை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதன் முதலாக அமல்படுத்தப்பட்டுள்ளது. நுழைவுத்தேர்வு மையங்கள் குறித்து மே 30-ம் தேதிக்கு பின்னர் பல்கலைக்கழக இணையதளம் www.annamalaiuniversity,ac.in என்ற முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் தெரிவித்தார். பேட்டியின் போது பதிவாளர் (பொறுப்பு) என்.பஞ்சநதம், மாவட்ட வருவாய் அதிகாரி பொறுப்பில் உள்ள உதவி நிர்வாக அலுவலர் கிருஸ்துராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.