இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

அம்பை உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவிலில் மே 29 ல் கும்பாபிஷேகம்

அம்பாசமுத்திரம் அருள்மிகு உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவிலில் வரும் 29 ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

News image
Updated On :26 மே 2013, 5:02 am

ஷேக் அப்துல்காதர்

அம்பாசமுத்திரம் அருள்மிகு உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவிலில் வரும் 29 ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இக்கோவிலில் பல லட்சம் மதிப்பில் பஞ்சவர்ண கோபுரமும், விமானமும் ஆகியன புதிதாக நிர்மாணிக்கப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதையடுத்து வரும் 29 ம் தேதி (புதன்கிழமை) காலை 6 மணி முதல் 7.00 மணிக்குள் மஹா  கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இதையொட்டி திங்கள்கிழமை கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்குகி்றது. மகா கணபதி, புண்யாக வாஜனம், பஞ்சகவ்ய பூஜை, பிரம்மசாரி பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை, காலை 9 மணிக்கு நவக்கிரஹ பூஜை, நவக்கிரஹ ஹோமம், தனலட்சுமி பூஜை, கோ பூஜை, மாலை 4 மணிக்கு தீர்த்த சங்கிரஹனம், 5 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேசப்பலி, 6.30 க்கு கும்ப அலங்காரம், அம்பாள் யாகசாலை பிரவேசம், முதல் காலயாகசாலை பூஜை ஆகியன நடைபெறும்.

செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு 2 ம் யாகசாலை பூஜை, திரவ்யாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை, மாலை 5 மணிக்கு 3 ம் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை, இரவு 7 மணிக்கு யந்திரஸ்தாபனம், மருந்து சாத்துதல்,

29 ம் தேதி (புதன்கிழமை) காலை 4 மணிக்கு 4 ம் கால யாகசாலை பூஜை, ஸ்பர்ஸாஹூதி, மஹா பூர்ணாகுதி, தீபாராதனை, காலை 5 மணிக்கு யாத்ராதானம், 5.45 மணிக்கு கடம்புறம்பாடு, காலை 6 மணிக்கு விமான கும்பாபிஷேகம், 6.35 மணி முதல் 7 மணிக்குள் அம்பாள் மற்றும் பரிவார மூர்த்தி சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இதையடுத்து காலை 7.30 மணிக்கு அன்னதானம், 9.30 மணிக்கு மஹா அபிஷேகம், தீபாராதனை, இரவு 7 மணிக்கு பிரசன்ன பூஜை, சகஸ்ரநாமம், தீபாராதனை, 9 மணிக்கு அம்பாள் வீதி உலா ஆகியன நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.