கல்லிடைக்குறிச்சி கெங்காபரமேஸ்வரி அம்பாள் கோவிலில் மே 29 ல் கும்பாபிஷேகம்
கல்லிடைக்குறிச்சி அருள்மிகு கெங்காபரமேஸ்வரி அம்பாள் கோவிலில் வரும் 29 ம் தேதி (புதன்கிழமை) மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.


கல்லிடைக்குறிச்சி அருள்மிகு கெங்காபரமேஸ்வரி அம்பாள் கோவிலில் வரும் 29 ம் தேதி (புதன்கிழமை) மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
சேனைத் தலைவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில் பல லட்சம் மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து வரும் 29 ம் தேதி (புதன்கிழமை) காலை 6 மணி முதல் 7 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதையொட்டி திங்கள்கிழமை காலை 5.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, பஞ்ச கவ்ய பூஜை, கணபதி ஹோமம், பிரம்மசாரி பூஜை, கஜ பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை, 9 மணிக்கு நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், லட்சுமி பூஜை, லட்சுமி ஹோமம், கோ பூஜை, ப்ரசன்ன அபிஷேகம், மாலை 5 மணிக்கு நதியில் இருந்து புனித நீர் எடுத்து வருதல், மாலை 6 மணிக்கு பிரவேசப் பலி, காப்பு கட்டுதல், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாக வேள்வி சன்னவதி ஹோமம், சதுர வேத பாராயணம், திருமுறை பாராயணம் ஆகியன நடைபெறும்.
28 ம் தேதி (செவ்வாய்க்கிழமை) புன்னியாக வாசனம், பஞ்சகவ்ய பூஜை, சூர்ய கும்ப பூஜை, 2 ம் கால யாக வேள்வி, சன்னவதி ஹோமம், மூல மந்திர ஹோமம், தீபாராதனை, மாலை 5 மணிக்கு விசேச சாந்தி, விக்னேஸ்வர பூஜை, சோம கும்ப பூஜை, வேதா பாராயணம், 3 ம் கால யாக வேள்வி, சதுர்வேத பாராயணம் ஆகியன நடைபெறுகிறது.
29 ம் தேதி (புதன்கிழமை) காலை 4 மணிக்கு திருமுறை விண்ணப்பம், விசேஷசந்தி, பூதசந்தி, விக்னேஸ்வர பூஜை, புன்னியாக வாகனம், பஞ்சகவ்ய பூஜை, சூர்ய கும்ப பூஜை, வேதிகா அர்ச்சனை, வேத பாராயணம், 4 ம் கால யாகவேள்வி, ஸ்பரிசாஹூதி, பூர்ணாகுதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடும், இதையடுத்து காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் ரிஷப லக்னத்தில் கெங்காபரமேஸ்வரி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறும்.
காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மஹா அபிஷேகம், மகேஸ்வர பூஜை, மாலை 6 மணிக்கு பிரசன்ன பூஜை, அம்பாள் வீதி உலா ஆகியன நடைபெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...