ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட பணி நாடுனர்களுக்கு இணையதள கலந்தாய்வு மூலம் நியமன ஆணை நாளை திங்கள்கிழமை (மே 27) வழங்கப்படவுள்ளது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணிராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலை ஆசிரியர் தாவரவியல் பாடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பணி நாடுனர்களுக்கு இணையத்தள கலந்தாய்வு மூலம் நியமன ஆணை கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் திங்கள்கிழமை வழங்கப்படவுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் காலை 9.30 மணிக்கு முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு தங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆணை, அசல் கல்விச் சான்றுகள் மற்றும் கல்விச் சான்றுகளின் சான்றொப்பமிடப்பட்ட நகல்கள் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக அட்டையுடன் நேரில் ஆஜராக வேண்டும்.
அதேபோன்று, தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் தொகுதி 4ல் அடங்கிய இளநிலை உதவியாளர்கள் பணிக்கு தேர்வு பெற்று பள்ளிக் கல்வித் துறைக்கு, துறை ஒதுக்கீடு செய்யப்பட்ட கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பணி நாடுனர்களுக்கும் உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்படவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பவழ மல்லி பாடல்!

ஏப்.19-ல் இலங்கை செல்கிறார் குடியரசுத் துணைத் தலைவர்!

திருமாவளவனைப் பாராட்டிய அன்புமணி! ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒன்றாகப் போராடவும் உறுதி!!

திமுகவின் தோ்தல் அறிக்கை வெற்றிக்கு வழிவகுக்கும்: சிபிஐ மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

