ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

சிதம்பரம் அருகே பனியன் கம்பெனி தொழிலாளி வெட்டிக் கொலை

சிதம்பரம் அருகே ம.புளியங்குடியில் பனியன் கம்பெனி தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

News image
Updated On :27 மே 2013, 2:42 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே ம.புளியங்குடியில் பனியன் கம்பெனி தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

சிதம்பரம் அருகே உள்ள ம.புளியங்குடி கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (32). திருப்பூரில் பனியன் கம்பெனியில் பணியாற்றி வரும் இவர் சொந்த ஊரான ம.புளியங்குடிக்கு வந்துள்ளார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஊரில் நடந்து சென்று கொண்டிருந்த போது அதே ஊரைச் சேர்ந்த விஜயபாலன் (31) என்பவர் வழிமறித்து அரிவாளால் காத்திகேயனை வெட்டிக் கொலை செய்து விட்டு தலைமறைவானார். இதுகுறித்து தகவல் அறிந்த குமராட்சி போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 1999-ம் ஆண்டு ம.புளியங்குடியில் ஒரே நேரத்தில் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தற்போது கொலை செய்யப்பட்ட கார்த்திகேயன் கைதாகி குற்றம் நிருபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.