விருதுநகர் அருகே ரூ.1லட்சம் மதிப்புடைய மரங்களை வெட்டிக் கடத்தியதாக விவசாயி புகார் செய்ததன் பேரில் வச்சக்காரப்பட்டி போலீஸார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
விருதுநகர் அருகே வி.சுந்தரலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னச்சாமி(73). இவருக்குச் சொந்தமான விவசாயம் செய்யப்படாத நிலத்தில் கடந்த 5 ஆண்டுகளாக கரிமூட்டம் போடுவதற்காக கருவேல மரங்களை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த சில நாள்களாக கரிசல் காட்டு பக்கம் செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதையடுத்து, இவரது நிலத்தில் உள்ள கருவேல மரங்களை ஞாயிற்றுக்கிழமை யாரோ வெட்டி வருவதாக கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர்.அதன் அடிப்படையில் விரைந்து காட்டுப் பகுதிக்குச் சென்று பார்த்தார். அங்கு சிலர் அனுமதியில்லாமலும், விற்பனை செய்யப்படாத நிலையிலும் பொம்மையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிலர் மரங்களை வெட்டியது குறித்து தட்டிக் கேட்டார்.அப்படித்தேன் வெட்டுவோம் என்றும், கொலை மிரட்டல் விடுத்தும் மரங்களை கடத்திச் சென்றனர்.
இது தொடர்பாக உடனே வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து பொம்மையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(50), அவரது சகோதரர் சேது(40) மற்றும் காந்தி(40) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.