சிதம்பரம் மேலவீதி கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் குருபெயர்ச்சி சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீமகாகணபதி ஹோமத்துடன் தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. திங்கள்கிழமை ஸ்ரீகன்னிகாபரமேஸ்வரிக்கு அபிஷேக ஆராதனை, கலசங்கள் ஆவாஹனம், கலசங்களுக்கு உபசார பூஜைகள். மாலை 6 மணிக்கு தேவார இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மே 28-ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 9.10 மணிக்கு குருபகவவான் ரிஷப ராசியிலிருந்து, மிதுன ராசிக்கும் பிரவேசிப்பதால் காலை கணபதி ஹோமத்துடன் சிறப்பு மகாயாகம் தொடங்கி நவக்கிரக ஹோமம், சகல திரவியங்களின் ஆகுதி மற்றும் மகா பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது.