மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் உயிரிழந்தவர் கொல்லப்பட்டதாக போலீசில் உறவினர்கள் புகார் அளித்தனர்.
கரூர் அருகே உள்ள தொழிற்பேட்டையில் உள்ள டாஸ்மாக் பாரில் கடை நடத்தி வந்தவர் ஐயப்பன்(32). இவர் தொழிற்பேட்டை அருகே உள்ள அமராவதி ஆற்றில் குளிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், சணப்பிரட்டி அருகேயுள்ள மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய நிலையில், உயிரிழந்து கிடந்தார்.
இதுகுறித்த தகவலறிந்த பசுபதிபாளையம் போலீசார் பிணத்தை கைப்பற்றி விபத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இன்று ஐயப்பனின் அண்ணன் ராஜேந்திரன் மற்றும் உறவினர்கள் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில், ஐயப்பன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என புகார் அளித்தனர். ஆய்வாளர் அருள் மொழி அரசு பிரேதப் பரிசோதனை அறிக்கை அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் போர் தொடங்கும்: டிரம்ப்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் அரிவாள் வெட்டு சம்பவம்: ஒருவர் சுட்டுப் பிடிப்பு!

வள்ளுவரைக் களங்கப்படுத்தாதீர்! - அமைச்சர் அருண்ராஜ்

சொல்லப் போனால்... திமுக – அதிமுக கூட்டணியும் அரைகுறை உண்மையும்!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


