அண்டை மாநிலமான ஆந்திராவில் இத்தகைய ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கான தகுதி மதிப்பெண்களாக பொதுப்பிரிவினருக்கு 60 சதவீதம், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீதம், தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு 40 சதவீதம் என நிர்ணயிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் கல்லூரி பேராசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் மூலம் நடத்தப்படும் செட் தகுதித் தேர்வில் வெற்றி பெற பொதுப் பிரிவினர் 40 சதவீதம் மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற நிலையில், மற்ற பிரிவினர் 35 சதவீதம் மதிப்பெண் எடுத்தால் போதுமானது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.ஆனால், இந்த நியதிக்கு எதிராக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதித் தேர்வில் வெற்றி பெற அனைத்துப் பிரிவினரும் 60 சதவீதம் மதிப்பெண்கள் எடுக்கவேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.