மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தனியார் பள்ளி ஆசிரியையிடம் 3 சவரன் நகை பறிப்பு

விருதுநகர் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீகுமாரின் மனைவி இசைவாணி(35). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில்  நேற்று(புதன்கிழமை) இரவு வெயிலுகந்தம்மன் திருக்கோயில் திருவிழாவை முன்னிட்டு உறவினரின் அக்னிச்சட்டி எடுத்துச் செல்லும்

Updated On :30 மே 2013, 9:54 am

விருதுநகரில் திருவிழா பார்த்துவிட்டு தனியாக சென்ற தனியார் பள்ளி ஆசிரியையின் கழுத்தில் கிடந்த 3 சவரன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

விருதுநகர் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீகுமாரின் மனைவி இசைவாணி(35). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில்  நேற்று(புதன்கிழமை) இரவு வெயிலுகந்தம்மன் திருக்கோயில் திருவிழாவை முன்னிட்டு உறவினரின் அக்னிச்சட்டி எடுத்துச் செல்லும் நிகழ்ச்சியில் பங்கேற்று வழிபாடு செய்வதற்கு சென்றாராம். அங்கு, சாமி வழிபாடு செய்து விட்டு இரவு 10.30-க்கு சண்முகம் சாலை வழியாக தனது இல்லத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, பின் தொடர்ந்து வந்த உயரமாகவும், கருப்பாகவும் இருந்த பெயர் தெரியாத மர்ம ஒருவர் வழிமறித்து இசைவாணியின் கழுத்தில் கிடந்த 3 சவரன் நகையை பறித்தார். உடனே அபாயக்குரல் எழுப்பிய நிலையில் பொதுமக்கள் அங்கு வருவதற்குள் மர்ம ஓடி தலைமறைவானார். இது குறித்து விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் இசைவாணி புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து நகையை பறித்துச் சென்ற மர்ம நபர் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.