சிதம்பரம் அருகே கொக்கு பிடிக்க சென்ற இருவர் மின்சாரம் பாய்ந்து சாவு!
சிதம்பரம் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை கொக்கு பிடிக்கச் சென்ற போது வயலில் கிடந்த மின்சார ஒயரை மிதித்த இருவர் மின்சாரம் பாய்ந்த சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர்.


சிதம்பரம் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை கொக்கு பிடிக்கச் சென்ற போது வயலில் கிடந்த மின்சார ஒயரை மிதித்த இருவர் மின்சாரம் பாய்ந்த சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர்.
வேலூர் மாவட்டம் துரைப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஹரிதாஸ் (38). இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர் கடந்த சில வருடங்களாக சிதம்பரம் அருகே வேளக்குடியில் குடிசை போட்டு குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி (29) என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மனைவி சுமதியின் தங்கை சாந்தி மற்றும் அவரது கணவர் சுப்பிரமணியன் (33) குழந்தைகளுடன் ஹரிதாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர்.
பின்னர் ஹரிதாஸ், சுப்பிரமணியன் ஆகிய இருவரும் அதிகாலை 5.30 மணிக்கு அருகாமையில் உள்ள அக்கரை திட்டுக்காட்டூர் பகுதியில் கொக்கு பிடிக்க வயல்வெளிக்கு சென்றுள்ளனர். வயல்வெளிக்கு சவுக்குதோப்பு வழியாக சென்ற போது அறுந்து கிடந்த மின்சார ஒயரை சுப்பிரமணியன் மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தார். அவரை காப்பாற்ற சென்ற ஹரிதாஸ் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே மின்சாரம் பாய்ந்து உடல் கருகி இறந்தனர்.
தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் மற்றும் அண்ணாமலைநகர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவர் சுப்பிரமணியன் இறந்ததை கேள்விபட்ட அவரது மனைவி சாந்தி மனநிலை பாதித்து சிரித்துக் கொண்டே இருப்பதை பார்த்து அனைவரது மனமும் வேதனையுற்றது. மேலும் இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...