சிதம்பரம் பகுதியில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால் நகரில் அனைத்து சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
சிதம்பரம் நகரில் திங்கள்கிழமை காலை முதல் பலத்த இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் நகரில் அனைத்து சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் பலத்த மழையினால் கடும் அவதியுற்றனர். தீபாவளி பண்டிகைக்காக ஹோட்டல்களில் பணியாற்றிய ஊழியர்கள் ஊர் திரும்பாதகால் ஒரு சில ஹோட்டல்களை தவிர அனைத்து ஹோட்டல்களும் மூடப்பட்டிருந்ததால் உணவு கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் அவதியுற்றனர். தீபாவளி பண்டிகை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. பலத்த மழையினால் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களின் வருகை எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது.
சிதம்பரம் பகுதியில் மழை விபரம்: சிதம்பரம்- 26.80 மி.மீ, பரங்கிப்பேட்டை 9.30 மி.மீ, ஸ்ரீமுஷ்ணம்- 6 மி.மீ, அண்ணாமலைநகர்- 19.20 மி.மீ, சேத்தியாத்தோப்பு- 6.10 மி.மீ, புவனகிரி -19 மி.மீ.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே ட்ரோன்: 3 பேர் கைது
சென்னையில் இன்று விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து

சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


