ஸ்ரீவில்லிபுத்தூர் - இந்திராநகரில் தொடர்ந்து இரு சமுதாயத்தினரிடையே மோதல் நடைபெற்று வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் நால்வர் காயம் அடைந்தனர். புகாரின் பேரில் மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் - இந்திராநகரைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகன் ராஜசேகர் (21). இவரது தரப்பினருக்கும் இந்திராநகர் - பாண்டியன்நகரைச் சேர்ந்த செல்வம் மகன் முருகேசன் என்பவர் தரப்பிற்கும் இங்குள்ள கோயில் பொங்கல் விழாவின் போது விரோதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் இரு கோஷ்டியினரும் மோதிக் கொண்டனர். இதில் ரவிச்சந்திரன் மகள் விஜயபாலா (23), து.ரவிச்சந்திரன் (55), ராஜசேகர் (21), தங்கராஜ் மனைவி கோகிலா (45) ஆகியோரை செல்வம் மகன் முருகேசன், வன்னியம்பட்டி கோவிந்தராஜ் மகன் வைரமுத்து, பாண்டியன்நகர் கருப்பையன் மகன் முருகேசன் ஆகியோர் சேர்ந்து சாதியைக் கூறி ஆபாசமாகப் பேசி கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினார்களாம். இதில் நால்வரும் காயம் அடைந்தனர்.
இது தொடர்பாக ராஜசேகரன் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் செ.முருகேசன், கோ.வைரமுத்து, க.முருகேசன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
சில வாரங்களுக்கு முன்னர் இதுபோன்று இரு தரப்பினரும் மோதிக் கொண்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இப் பகுதியில் வேற்று சமுதாயத்தினரிடையே மோதல் சம்பவங்கள் தொடர்வது இப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

