தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

பண்ருட்டியில் ஆக்ரமிப்புகள் அகற்றுவது ஒத்திவைப்பு

பண்ருட்டி பணிக்கன்குப்பம் ஊராட்சியில் சுமார 15க்கும் மேற்பட்டோர் மாநில நெடுஞ்சாலையோரம் உள்ள இடத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தீபாவளிக்கு முன்னர் இங்கு குடியிருப்பவர்களை அகற்றும் முயற்சியை வருவாய்த் துறையினர் மேற்கொண்டனர். தீபாவளியை முன்னிட்டு இப்பணி ஒத்திவைக்கப்பட்டது.

News image
Updated On :5 நவம்பர் 2013, 6:45 am

சீனிவாசன்

பண்ருட்டி பணிக்கன்குப்பம் ஊராட்சியில் சுமார 15க்கும் மேற்பட்டோர் மாநில நெடுஞ்சாலையோரம் உள்ள இடத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தீபாவளிக்கு முன்னர் இங்கு குடியிருப்பவர்களை அகற்றும் முயற்சியை வருவாய்த் துறையினர் மேற்கொண்டனர். தீபாவளியை முன்னிட்டு இப்பணி ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று ஆக்ரமிப்புகளை அகற்றுவதற்கு  பண்ருட்டி வருவாய் துறையினர், போக்குவரத்து துறையினர் வந்துள்ளனர். இங்கு தனியாருக்கு சொந்தமான முந்திரி நிறுவனம்  ஒன்றும் உள்ளது. இந்த முந்திரி நிறுவனத்தில் சுமார் 200 பேர் வரை பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனம் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்த இடத்தில் உள்ளது.

இப்பகுதியில் இருந்த பாலம் பழுதடைந்ததால், இந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வருவாய்த் துறையினர் ஆக்ரமிப்புகளை அகற்ற வந்த போது பொதுமக்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இப்பகுதியில் போக்குவரத்தே இல்லை. அதே சமயம் இது குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திலும், பண்ருட்டி குற்றவியல் நடுவர் மன்றத்திலும் நடைபெற்ற வருகிறது.

ஆகையால் வழக்கின் தீர்ப்பு வெளியான பிறகே, இந்த இடத்தில் ஆக்ரமிப்புகளை அகற்ற முடியும் என்று பொதுமக்கள் தெரிவித்ததுடன், 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டதன் பேரில், ஆக்ரமிப்புகளை அகற்றும் பணி கைவிடப்பட்டது.

இதனால், அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.