சிதம்பரம் புறவழிச்சாலையில் மாணவியிடம் 2 பவுன் செயின் பறிப்பு
சிதம்பரம் அருகே உள்ள நாஞ்சலூர் வடக்குத்தெருவைச் சேர்ந்த சக்திவேல் மகள் ஜோதி (16). இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நர்சிங் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில்


சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில் மாணவியிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பவுன் செயின் மற்றும் ரொக்கம் ரூ.ஆயிரத்தை பறித்துச் சென்றனர்.
சிதம்பரம் அருகே உள்ள நாஞ்சலூர் வடக்குத்தெருவைச் சேர்ந்த சக்திவேல் மகள் ஜோதி (16). இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நர்சிங் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை மோட்டார் சைக்கிளில் கல்லூரியிலுருந்து ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து இரு மோட்டார் சைக்கிள்கள் வந்த மர்மநபர்கள் வழிமறித்து கழுத்திலிருந்த 2 பவுன் செயின் மற்றும் ரொக்கம் ரூ.ஆயிரத்தை பறித்துக் கொண்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...