தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பெண் குழந்தை பிறந்ததால் மருத்துவமனையிலேயே தூக்கிட்டு தந்தை தற்கொலை

கடலூர் மாவட்டம் கம்மாபுரம் அருகே உள்ள வி.குமாரமங்கலத்தைச் சேர்ந்த செல்வம் (45). இவரது மனைவி பெயர் பானுமதி (38). இவர்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிறது. நீண்ட வருடங்கள் கழித்து கடந்த

News image
Updated On :9 நவம்பர் 2013, 9:24 am

ஜி.சுந்தரராஜன்

பெண் குழந்தை பிறந்தததால் மணம் உடைந்த தந்தை சிதம்பரம் மருத்துவமனையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர் மாவட்டம் கம்மாபுரம் அருகே உள்ள வி.குமாரமங்கலத்தைச் சேர்ந்த செல்வம் (45). இவரது மனைவி பெயர் பானுமதி (38). இவர்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிறது. நீண்ட வருடங்கள் கழித்து கடந்த 5 வருடம் முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. தற்போது 2வது முறையாக பானுமதி கர்ப்பமாகி பிரசவத்திற்காக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் பானுமதிக்கு வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. மீண்டும் பெண் குழந்தை பிறந்ததால் மணம் உடைந்த கணவர் செல்வம் மருத்துவமனை வராண்டாவில் உள்ள ஜன்னலில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.