இஸ்லாமியர்கள் கடைப்பிடிக்கும் மொஹரம் நாளின் தேதி மாற்றப்பட்டுள்ளதால், அரசு அறிவித்துள்ள விடுமுறை தேதியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 14 ஆம் தேதிக்குப் பதிலாக, 15 ஆம் தேதி அரசு விடுமுறை விடப்படுகிறது.
அரசு தலைமை ஹாஜியின் தகவலைத் தொடர்ந்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இஸ்லாமியர்களின் ஆண்டு மொஹரம் மாதத்தில் தொடங்குகிறது. மொஹரத்தின் முதல் நாள் என்பது வானில் தெரியும் முழு நிலவைப் பொறுத்தே கணக்கிடப்படுகிறது. நிலவு தெரியும் நாள் முதல் நாள் எனவும் அந்த நாளில் இருந்து 10 நாளே மொஹரம் நாள் என்றும் இஸ்லாமியர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த பத்து நாட்களிலும் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை நடத்துவார்கள். மேலும், ஒன்பது மற்றும் பத்தாவது நாட்களில் நோன்பு இருப்பார்கள்.
இந்த ஆண்டு மாற்றம்: இந்த ஆண்டு முழு நிலவு தெரிந்த நாள் கடந்த 6 ஆம் தேதி என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி, 10 நாட்கள் கழித்து அதாவது நவம்பர் 15 ஆம் தேதியன்றே மொஹரம் கொண்டாடப்பட வேண்டும்.
இந்த ஆண்டுக்கான அரசு விடுமுறை பட்டியலில் மொஹரம் பண்டிகை விடுமுறை நவம்பர் 14 ஆம் தேதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அரசு தலைமை ஹாஜி கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், விடுமுறை தேதி மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் திங்கள்கிழமை வெளியிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.