தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

சிதம்பரத்தில் முழுஅடைப்பு: பெரும்பான்மையான கடைகள் மூடப்பட்டிருந்தன

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதை கண்டித்து வணிகர் சங்கங்களின் தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை முழுஅடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

News image
Updated On :12 நவம்பர் 2013, 5:43 am

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதை கண்டித்து வணிகர் சங்கங்களின் தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை முழுஅடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

சிதம்பரம் நகரில் பெரும்பான்மையான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக காசுக்கடைத்தெரு, மேலவீதி ஆகிய பகுதிகளில் அனைத்து நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. மேலும் கடைஅடைப்பிற்கு சிறுதொழில் முனைவோர் அமைப்பு ஆதரவு அளித்ததை முன்னிட்டு சிறுதொழில் முனைவோர் அனைவரும் கடைகளை அடைத்திருந்தனர். முழுஅடைப்பு போராட்டத்தை முன்னிட்டு நகரில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. நீண்ட தூரம் செல்லும் அரசு பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டதால் பேருந்து நிலையத்தில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

கடைகளை அடைக்க கோரிய மதிமுகவினர் கைது: சிதம்பரத்தில் நகரமன்ற உறுப்பினர் எல்,சீனுவாசன் தலைமையில் மதிமுகவினர் 10 பேர் கடைகளை அடைக்கச் சொல்லி ஊர்வலமாக சென்றனர். அப்போது தெற்குரதவீதியில் டிஎஸ்பி ஆர்.ராஜாராம், இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் மற்றும் போலீஸார் அவர்களை மறித்து கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தலின் முதல் கட்ட ஓட்டுப்பதிவு நேற்று நடைபெற்றது. இதன் அடுத்த கட்ட ஓட்டுப்பதிவு வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா இன்று பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.