நாகை துறைமுக அலுவலகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை சனிக்கிழமை மாலை நாகை அருகே கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டதைத்


நாகை துறைமுக அலுவலகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வெள்ளிக்கிழமை மாலை ஏற்றப்பட்டது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை சனிக்கிழமை மாலை நாகை அருகே கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, நாகை துறைமுக அலுவலகத்தில் 1 ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு புதன்கிழமை மாலை ஏற்றப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை நாகை துறைமுக அலுவலகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. திடீர்க் காற்றுடன் மழை பெய்யக் கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்பதை அறிவிக்கும் உள்ளூர் முன்னறிவிப்பாக இந்தக் கூண்டு ஏற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...