இலங்கைத் தமிழர் பிரச்னையில் பாஜக இரட்டை வேடம் போடுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு வெள்ளிக்கிழமை அவர் அளித்த பதில்:
இலங்கையில் நடைபெற்று வரும் காமன்வெல்த் மாநாட்டில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொண்டது குறித்து தமிழகத்தில் சிலர் விமர்சிக்கின்றனர்.காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கக் கூடாது என்றுதான் காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தினார்கள். மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் என்பது தான் தமிழக காங்கிரஸ் தலைவர்களின் நிலைப்பாடு. பிரச்னையை சம்பந்தப்பட்டவர்களோடு பேசித்தான் தீர்க்க முடியும்.
இலங்கை அதிபருக்கு எழுதிய கடிதத்தில் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காததன் காரணத்தை பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிடவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர். ஒரு நாட்டின் பிரதமர் சர்வதேச அரசியலைக் கருத்தில் கொண்டு சிலவற்றைதான் எழுத்தில் குறிப்பிட முடியும். இந்தியப் பிரதமர் மாநாட்டை தவிர்த்ததை மதிப்பதாக இங்கிலாந்து பிரதமர் கேமரூன் சொல்லியிருக்கிறார். மாநாட்டை பிரதமர் ஏன் தவிர்த்தார் என்பது உலக நாடுகளுக்கு குறிப்பாக இலங்கைக்குத் தெரியும்.
மோடியின் கருத்து என்ன:
இந்திய அரசியல் மட்டுமல்ல, சர்வதேச அரசியல் பற்றியும் பேசிவரும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, காமன்வெல்த் மாநாடு குறித்து எதுவும் பேசாதது ஏன் மாநாட்டில் பிரதமர் பங்கேற்க வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து அவர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் ஒரு விதமாகவும், அகில இந்தியத் தலைவர்களில் ஒருவரான வெங்கய்ய நாயுடு வேறு விதமாகவும் பேசி வருகின்றனர். இந்த விஷயத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது.தங்களுக்கு இடையேயான பிரச்னை குறித்து இந்திய - இலங்கை மீனவர்கள் சந்தித்துப் பேச உறுதுணையாக இருப்போம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தும், இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் பெரீஸþம் உறுதி அளித்துள்ளனர்.
வரும் டிசம்பரில் இரு நாட்டு மீனவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதாக தமிழக அரசும் அறிவித்துள்ளது. இந்திய அரசு, தமிழக அரசு மற்றும் இலங்கை அரசு பிரதிநிதிகள் முன்னிலையில் இரு நாட்டு மீனவர்கள் நடத்தும் பேச்சுவார்த்தையில் பிரச்னைக்கு முடிவு வரும் என்று நம்புவதாக ஞானதேசிகன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பழனியில் 2 அரசுப் பேருந்துகள் ஜப்தி

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

மாணவியை கத்தியால் வெட்டியவா்களை கைது செய்ய வலியுறுத்தி மீஞ்சூா் காவல் நிலையம் முற்றுகை
சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவா் கைது
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

