மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தேர்தல் ஆணையத்திடம் திமுக மீண்டும் புகார்

ஏற்காடு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான அதிமுக, தேர்தல் நடத்தை விதிகளை தொடர்ந்து மீறி வருகிறது. இது குறித்து ஏற்கெனவே தங்களிடம் புகார் அளித்துள்ளோம்.நவம்பர் 10-ம் தேதி விதிமுறைகளை

Updated On :16 நவம்பர் 2013, 12:31 pm

ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுகவினர் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகளை மீறி வருவதாக திமுக மீண்டும் புகார் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமாருக்கு சனிக்கிழமை அனுப்பிய மனுவில் திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறியிருப்பதாவது:

ஏற்காடு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான அதிமுக, தேர்தல் நடத்தை விதிகளை தொடர்ந்து மீறி வருகிறது. இது குறித்து ஏற்கெனவே தங்களிடம் புகார் அளித்துள்ளோம்.நவம்பர் 10-ம் தேதி விதிமுறைகளை மீறி 10-க்கும் அதிகமான வாகனங்களுடன் சென்று அதிமுக வேட்பாளர் சரோஜாவும், தமிழக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் பிரசாரம் செய்துள்ளனர்.ஏற்காடு தொகுதிக்குப்பட்ட கக்கம்பாடி கிராமத்தில் சத்துணவு அமைப்பாளராகப் பணிபுரியும் லோகநாதன் என்பவர், அமைச்சருடன் பிரசாரத்துக்குச் சென்றுள்ளார். இது குறித்து பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.எனவே, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.