/

திருக்கோவிலூர்:6 மாத குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

திருக்கோவிலூர் கிழக்கு வீதியைச் சேர்ந்தவர் சையத்சர்தார் மகன் முகமதுசாகிப் (6 மாத குழந்தை). இக்குழந்தை டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு

News image
Updated On :18 நவம்பர் 2013, 1:37 pm

ச.​ கார்த்​தி​கே​யன்

 திருக்கோவிலூரில் 6 மாத குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது திங்கள்கிழமை உறுதியாகியுள்ளது.

 திருக்கோவிலூர் கிழக்கு வீதியைச் சேர்ந்தவர் சையத்சர்தார் மகன் முகமதுசாகிப் (6 மாத குழந்தை). இக்குழந்தை டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது  அக்குழந்தைக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

 இதையடுத்து திருக்கோவிலூர் நகர்ப் பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் ஜி.அரியூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் செவ்வாய்கிழமை தீவிர துப்புரவுப் பணி மற்றும் நோய்த் தடுப்பு முகாம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.