அண்ணாமலைப் பல்கலைக்கழக வெப்சைட்டை புதிய வடிவில் உருவாக்கியுள்ள நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அரசின் முழுக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த பின்னர் பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா பல்வேறு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ், பல்கலைக்கழக வெப்சைட்டை புதிய வடிவில் தயாரித்து உருவாக்கி நடைமுறைப்படுத்தியுள்ளார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அரசின் முழுக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த பின்னர் பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா பல்வேறு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா பல்கலைக்கழகத்தின் www.annamalaiuniversity.ac.in என்ற வெப்சைட்டை புதிய வடிவில் அனைத்து தகவல்களுடன் தயாரித்து உருவாக்கி நடைமுறைப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு முறையும் பல்கலைக்கழக வெப்சைட்டை தொடர்பு கொள்ளும் போது ஹோம் பக்கத்தில் வெவ்வேறு திருக்குறள் ஒன்று விளக்கத்துடன் வருகிறது. எளிய வடிவில் பல்கலைக்கழக தகவல்களை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் உருவாக்கியுள்ளார்.
மேலும் 2013 பல்கலைக்கழக சட்டம் விபரமும் ஹோம் பக்கத்தில் உள்ளது. வெப்சைட்டில் பல்கலைக்கழக வரலாறு பக்கத்தில் பல்கலைக்கழக நிறுவனர் ராஜாசர் அண்ணாமலை செட்டியார், 2வது நிறுவனர் ராஜாசர் முத்தையா செட்டியார், பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ், பதிவாளர் என்.பஞ்சநதம், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஏ.ரகுபதி ஆகியோரின் படங்கள் இடம் பெற்றுள்ளன. பல்கலைக்கழகத்தில் 49 துறைகள் உள்ளது. 3240 ஆசிரியர்கள் கல்வி பயிற்றுவிக்கின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...