தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சிதம்பரத்தில் திடீரென அறுந்து விழுந்த உயர்அழுத்த மின்கம்பி: வீடுகளில் மின்சாதனங்கள் எரிந்து புகைந்தன

சிதம்பரம் சின்னசெட்டித்தெருவில் புதன்கிழமை மாலை 3 மணியளவில் திடீரென சத்தத்துடன் உயர்அழுத்த மின்கம்பி திடீரென அறுந்து விழுந்தது. இதனால் சின்னசெட்டித்தெரு, நெல்லுக்கடைத்தெரு

News image
Updated On :20 நவம்பர் 2013, 1:43 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் நகரில் சாலையில் திடீரென உயர்அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால், அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் இருந்த மின்சாதனங்கள் எரிந்து புகைந்து நாசமானது.

சிதம்பரம் சின்னசெட்டித்தெருவில் புதன்கிழமை மாலை 3 மணியளவில் திடீரென சத்தத்துடன் உயர்அழுத்த மின்கம்பி திடீரென அறுந்து விழுந்தது. இதனால் சின்னசெட்டித்தெரு, நெல்லுக்கடைத்தெரு உள்ளிட்ட தெருக்களில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் இருந்த இன்வெர்ட்டர்கள், டீவி, ரெப்ரிஜிரேட்டர், மின்மோட்டார்கள் உள்ளிட்ட மின்சாதனங்கள் புகைந்து வீணாகின. தகவல் அறிந்த சிதம்பரம் மின்வாரியத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து அறுந்து கிடந்த மின்கம்பியை சீரமைத்து பணியில் ஈடுபட்டனர்.

தொடரும் மின்கம்பி அறுந்து விழும் சம்பவம்: சிதம்பரம் நகரில் தெற்குரதவீதியில் சில மாதங்கள் முன்பு உயர்மின்அழுத்த கம்பி அறுந்து விழுந்தது. இதே சின்னசெட்டித்தெருவில் இருமுறை மின்கம்பி அறுந்து விழுந்ததாகவும், பின்னர் மின்வாரியத்தினர் வந்து சீரமைத்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். சமீபத்தில் சிதம்பரம் அருகே திட்டுக்காட்டூர் கிராமத்தில் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்து ஹரிதாஸ் (38), சுப்பிரமணியன் (33) இருவர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.