சிதம்பரத்தில் விவசாயத் தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!
முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கும் பயனாளிகளுக்கு உடன் உதவித்தொகை வழங்க வேண்டும், புறம்போக்கில் குடியிருப்பவர்களுக்கு குடிமனை பட்டா வழங்க


சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கும் பயனாளிகளுக்கு உடன் உதவித்தொகை வழங்க வேண்டும், புறம்போக்கில் குடியிருப்பவர்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும், குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு உடன் குடும்ப அட்டை வழங்க வேண்டும், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு அட்டை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் பி.சிவலிங்கம் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஜி.வேலப்பன், டி.சுப்பிரமணியன், கே.ராமச்சந்திரன், சி.குப்புசாமி, எஸ்.மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் எம்.பி.தண்டபாணி, மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.கலியபெருமாள், பொருளாளர் ஏ.செல்லையா, கீரப்பாளையம் ஒன்றியச் செயலாளர் ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...