சிதம்பரம் மக்கள் நீதிமன்றம் மூலம் பாரத ஸ்டேட் வங்கி 62 வழக்குகள் தீர்வு!
ஓய்வுபெற்ற நீதிபதி மணி மக்கள் நீதிமன்றத்தை நடத்தினார். இதில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் மந்திரி, சட்டப்பணிகள் குழு ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், பாரத ஸ்டேட் வங்கி துணை பொது மேலாளர்


சிதம்பரம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் பாரத ஸ்டேட் வங்கி வழக்குகளுக்கான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) புதன்கிழமை நடைபெற்றது.
ஓய்வுபெற்ற நீதிபதி மணி மக்கள் நீதிமன்றத்தை நடத்தினார். இதில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் மந்திரி, சட்டப்பணிகள் குழு ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், பாரத ஸ்டேட் வங்கி துணை பொது மேலாளர் செல்லமய்யா, மண்டல முதன்மை மேலாளர் (ஊரகம்) சுகுமார்ராஜன், சிதம்பரம் கிளை முதன்மை மேலாளர் எம்.கே.கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிதம்பரம் வட்டத்தில் உள்ள 6 பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் வழக்குகள் மூலம் ரூ.1 கோடியே 69 ஆயிரம் தொகை நிலுவையில் உள்ளது.
மக்கள் நீதிமன்றத்தில் 62 வழக்குகள் பேசி தீர்க்கப்பட்டு ரூ.86 லட்சத்து 20 ஆயிரம் தொகை பெற தீர்வு காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...