தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் லட்சதீபம்!

ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த பக்தர்கள் புதன்கிழமை நடராஜர் கோயில் கிழக்கு வாயிலில் 21 படிகளுக்கு முன்புறம் உள்ள மண்டபத்தில் அழகிய கலைவண்ணத்தில் பூக்களால் மிகப்பெரிய சிவலிங்கத்தை

News image
Updated On :20 நவம்பர் 2013, 9:29 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த பக்தர்களால் புதன்கிழமை லட்சதீபம் ஏற்றப்பட்டது.

ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த பக்தர்கள் புதன்கிழமை நடராஜர் கோயில் கிழக்கு வாயிலில் 21 படிகளுக்கு முன்புறம் உள்ள மண்டபத்தில் அழகிய கலைவண்ணத்தில் பூக்களால் மிகப்பெரிய சிவலிங்கத்தை வரைந்து, அதன் விளிம்புகளில் லட்சதீபம் ஏற்றி வழிபட்டனர். ஒவ்வொரு ஆண்டும் பஞ்சபூத ஸ்தலங்களில் லட்சதீபம் ஏற்றி வரும் திருப்பதியைச் சேர்ந்த பக்தர்கள் குழுவினர் 5வது ஸ்தலமாக சிதம்பரத்தில் புதன்கிழமை லட்சதீபம் ஏற்றி வழிபட்டனர். பஞ்சபூத ஸ்தலங்களான காளஹஸ்தி, காஞ்சிபுரம், திருவானைக்காவல், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகிய ஸ்தலங்களில் லட்சதீபம் ஏற்றி வழிபட்டுள்ளனர் இக்குழுவினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.