தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மாநில அளவிலான அறிவியல் மாநாட்டில் பங்கேற்க சிதம்பரம் மாணவியர்கள் தேர்வு

மாநில அளவில் திருப்பூரில் நடைபெறவுள்ள தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க சிதம்பரம் ராமகிருஷ்ணா வித்தியாசாலா மேல்நிலைப்பள்ளி மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

News image
Updated On :20 நவம்பர் 2013, 12:20 pm

ஜி.சுந்தரராஜன்

மாநில அளவில் திருப்பூரில் நடைபெறவுள்ள தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க சிதம்பரம் ராமகிருஷ்ணா வித்தியாசாலா மேல்நிலைப்பள்ளி மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்ட அளவிலான தேசிய அறிவியல் மாநாடு கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இம்மாதம் 12-ம் தேதி நடைபெற்றது. க48 பள்ளிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று அறிவியல் ஆய்வறிக்கைகளை சமர்பித்தனர். இம்மாநாட்டில் சிதம்பரம் ஸ்ரீராமகிருஷ்ணா வித்தியாசாலா மேல்நிலைப்பள்ளி மாணவியர்கள் எஸ்.சண்முகப்பிரியா, வி.நந்தினி, எஸ்.பி.சுபஸ்ரீ, எஸ்.பவித்ரா, டி.பிரியங்கா குழுவினர் சமர்பித்த சுருள்பாசி ஒர் உயிரி எரிபொருள் என்ற தலைப்பிலான அறிவியல் ஆய்வறிக்கை இரண்டாமிடம் பெற்று மாநில அளவிலான அறிவியல் மாநாட்டில் பங்கேற்க தகுதி பெற்றனர்.

தேர்வு பெற்ற மாணவியர்களையும், வழிகாட்டிய ஆசிரியர்களையும் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிச் செயலர் ரத்தின.பாலசுப்பிரமணியன், தொழிலதிபர்கள் ஆர்.ராமநாதன், ஆர்.திருநாவுக்கரசு, லைமை ஆசிரியர் ஆர்.ரவிசங்கர், உதவித் தலைமை ஆசிரியர் டி.சுவாமிநாதன் ஆகியோர் பாராட்டி கவுரவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.