15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு:தமிழக முன்னேற்ற காங்கிரஸ் அறிவிப்பு

ஏற்காடு இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தமிழக முன்னேற்ற காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

Updated On :21 நவம்பர் 2013, 5:23 pm

ஏற்காடு இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தமிழக முன்னேற்ற காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

 இது குறித்து கட்சியின் நிறுவனத் தலைவர் எஸ்.அருள்தாஸ், சேலத்தில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:

 தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு கடந்த இரண்டரை ஆண்டுகளில் பல நல்ல மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. எனவே இந்த அரசுக்கு ஊக்கமளிக்கும் விதமாக, நடைபெற உள்ள ஏற்காடு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுகவை ஆதரிப்பது என்று தமிழக முன்னேற்ற காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

 இதற்கான கடிதத்தை முதல்வரிடம் ஏற்கெனவே அளித்துள்ளோம். இந்த நிலையில் அதிமுக வேட்பாளர் பி.சரோஜாவை ஆதரித்து எங்கள் கட்சி சார்பில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளோம். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதைத் தடுக்க வேண்டும் என்று எங்கள் கட்சி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.

 தமிழக மீனவர்களுக்கு இந்திய கடற்படை பாதுகாப்பு வழங்க முடியாத நிலை ஏற்படுமானால், தமிழக காவல்துறையில் மீனவர்கள் பாதுகாப்புக்கு என்று தனி பிரிவை ஏற்படுத்த முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

 கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் பூபதி, மாவட்டத் தலைவர்கள் வேல்ராஜ், சார்லஸ், குருமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.