வாகன விபத்து வழக்கில் உரிய நஷ்டஈட்டுத் தொகையை அரசுப் போக்குவரத்துக் கழகம் வழங்காததைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டன. வழக்கு விவரம்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், கேப்பர்பட்டினத்தைச் சேர்ந்தவர் போஸ் (47). இவர் மதுரையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் டபேதராக வேலை பார்த்து வந்தார். கடந்த 5.12.2008 அன்று மதுரை மாவட்டம், ஒத்தக்கடையிலிருந்து மேலூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது மேலூரிலிருந்து மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து இவர் மீது மோதியதில் போஸ் மரணமடைந்தார்.இது குறித்து போஸின் மனைவி சரோஜா, மகள்கள் வசந்தா, சோபனா, தாயார் பிச்சையம்மாள், சகோதரி ஈஸ்வரி ஆகியோர் அரசுப் போக்குவரத்துக் கழகம் நஷ்டஈடு வழங்கக்கோரி சிவகங்கை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.22.11 லட்சத்தை அரசுப் போக்குவரத்துக் கழகம் வழங்க வேண்டும் என கடந்த 22.2.2011 அன்று உத்தரவு பிறப்பித்தார். இத்தொகையை ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.ஆனால் இத்தொகை வழங்கப்படாததைத் தொடர்ந்து மேல்முறையீடு செய்ததைத் தொடர்ந்து வட்டியுடன் சேர்த்து ரூ.28.99 ஆயிரம் வழங்க மறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இத்தொகையும் வழங்ப்படாததை அடுத்து கடந்த 30.10.2013 அன்று அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை கோட்டத்தின் பேருந்துகளை ஜப்தி செய்ய தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி மீராசுமதி உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து, சிவகங்கை பேருந்து நிலையத்திற்கு திங்கள்கிழமை வந்த மதுரை கோட்ட பேருந்துகள் 2 ஜப்தி செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நூறு சாமி டீசர்!

பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்கமொழியை அழித்துவிடும்: மமதா எச்சரிக்கை
இரண்டாம் தர குடிமக்களா நாங்கள்? - ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்!

அரசியலுக்கு வந்தபின் முதல்முறையாக... விஜய் பேட்டி ஒளிபரப்பு?
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

