புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இடிந்தகரையில் குண்டு வெடிப்பு : உதயக்குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

இடிந்தகரையில் ஒரு வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்த சம்பவத்தில் கூடங்களம் எதிர்ப்பு போராட்டக் குழுவைச் சேர்ந்த உதயகுமார், புஷ்பராயன், முகிலன், மில்டன், கெபிஸ்டன் உள்ளிட்ட 5 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :27 நவம்பர் 2013, 5:55 am

முருகன்

இடிந்தகரையில் ஒரு வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்த சம்பவத்தில் கூடங்களம் எதிர்ப்பு போராட்டக் குழுவைச் சேர்ந்த உதயகுமார், புஷ்பராயன், முகிலன், மில்டன், கெபிஸ்டன் உள்ளிட்ட 5 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெடிபொருட்களுக்கான ஆயுதங்களை வைத்திருந்தல், தீ வைத்தல், சதி திட்டம் தீட்டுதல், வெடி மருந்து சட்டப்பிரிவு, நாட்டுக்கு எதிராக சதி செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் வெடிக்காமல் இருந்த 2 குண்டுகள் சோதனை செய்தபோது கிடைத்தன.  இன்று நடந்த இடிபாடுகளை அகற்றும் பணியின் போது ஒரு குண்டு கிடைத்தது. மேலும், பாதி வெடித்த நிலையில் 2 குண்டுகள் மீட்கப்பட்டன.

மொத்தமாக 5 வெடிகுண்டுகளும் பாதுகாப்பான முறையில் செயலிழக்க வைக்கப்பட்டன.

உள்ளே கட்ட இடிபாடுகளுக்குள் இன்னமும் புகை வந்து கொண்டிருப்பதால் ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு இடிபாடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறார்.

அப்பகுதியில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு, அயுதப்படை பிரிவு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த சுனாமி காலனி போலிஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த பகுதி கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு அருகில் இருப்பதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.