இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

காட்டுமன்னார்கோயிலில் வட்டத்தில் மணல் கடத்திய 41 மாட்டு வண்டிகள் பறிமுதல்!

சிதம்பரத்தில் 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்: சிதம்பரம் நகரில் வடக்குமெயின்ரோடு பைசல் மஹால் எதிரில் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் வாகன தணிக்கை புதன்கிழமை வாகன தணிக்கை செய்து

News image
Updated On :27 நவம்பர் 2013, 1:36 pm

ஜி.சுந்தரராஜன்

கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் மணல் கடத்திய 41 மாட்டு வண்டிகள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

சிதம்பரத்தில் 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்: சிதம்பரம் நகரில் வடக்குமெயின்ரோடு பைசல் மஹால் எதிரில் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் வாகன தணிக்கை புதன்கிழமை வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த புவனகிரி வெள்ளாற்றில் இருந்து அனுமதி இல்லாமல் மணல் ஏற்றி வந்த 5 மாட்டு வண்டிகளை பிடித்து பறிமுதல் செய்தார். மேலும் இதுகுறித்து மேலமூங்கிலடி கிராமத்தைச் சேர்ந்த கஜேந்திரன் (50), சிவசாம்பு (50), ரவி (48), சி.தண்டேஸ்வரநல்லூரைச் சேர்ந்த திருஞானம் (40), கஜேந்திரன் (33) ஆகிய 5 பேர் மீது நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

காட்டுமன்னார்கோயிலில் 29 மாட்டு வண்டிகள் பறிமுதல்: காட்டுமன்னார்கோயிய் அருகே ஓமாம்புலியூரில் கொள்ளிடம் ஆற்றில் அரடசு மணல் குவாரி கடந்த ஓராண்டாக மூடப்பட்டுள்ளது. இருப்பினும் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளி வந்தனக். தகவல் அறிந்த காட்டுமன்னார்கோயில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதிவாணன் மற்றும் போலீஸார், வருவாய் ஆய்வாளர் அன்பழகன், கிராம நிர்வாக அலுவலர்கள் பார்த்தசாரதி, ரவி, கிராம உதவியாளர் சாந்தகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற 29 மாட்டு வண்டிகளை பிடித்து பறிமுதல் செய்தனர். இதுகுறித்து காட்டுமன்னாரக்கோயில் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

ஸ்ரீமுஷ்ணத்தில் 7 மாட்டு வண்டிகள் பறிமுதல்: ஸ்ரீமுஷ்ணம் அருகே வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற 7 மாட்டு வண்டிகளை சப்-இன்ஸ்பெக்டர் ஆசைத்தம்பி மற்றும் போலீஸார் பிடித்து பறிமுதல் செய்தனர். மேலும் ஸ்ரீமுஷ்ணம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த துரை (25), தனவேல் (34), அரியலூர் மாவட்டம் ரெட்டிசத்தூரைச் சேர்ந்த கதிரேசன் (55), விளந்தையைச் சேர்ந்த கணபதி (50), ஆண்டிமடத்தைச் சேர்ந்த இளையராஜா (23), மணக்கொல்லையைச் சேர்ந்த லாசர் (35), வரதராஜன்பேட்டையைச் சேர்ந்த அந்தோணிஜோசப் (38) ஆகிய 7 பேர் மீது ஸ்ரீமுஷ்ணம் போலீஸார் வழக்குப் பதிந்து மேல்விசாரணைக்கு சிதம்பரம் உதவிஆட்சியர் எம்.அரவிந்திற்கு பரிந்துரை செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.