வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பா.ஜ.க. இளைஞர் அணி பூட்டு போடும் போராட்டம்
புதுச்சேரியில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு இதுவரை வேலைவாய்ப்பு தரவில்லை எனக் கூறி பா.ஜ.க. இளைஞரணி சார்பில் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு பூட்டு போடும்


புதுச்சேரியில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு இதுவரை வேலைவாய்ப்பு தரவில்லை எனக் கூறி பா.ஜ.க. இளைஞரணி சார்பில் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு பூட்டு போடும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் 2.25 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தராமல் வேலைவாய்ப்புத்துறை செயல்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கும் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.முறையற்ற வகையில் அரசுப் பணிகளில் வேண்டியவர்களை நியமிக்கின்றனர்.இதனால் ஏழை இளைஞர்களுக்கு தகுதி இருந்தும் வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை.
இதைக் கண்டித்து பா.ஜ.க. இளைஞரணி சார்பில் பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும். பெயர்ப் பலகைக்கு கறுப்பு மை பூசப்படும் என அறிவிக்கப்பட்டது. மாநில இளைஞரணி செயலாளர் சி.சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர்கள் மகேஷ், வெற்றிவேல் முன்னிலை வகித்தனர்.பா.ஜ.க. மாநில தலைவர் விஸ்வேஸ்வரன், பொதுச்செயலர் சாமிநாதன் பங்கேற்று பேசினர்.
வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு பூட்டு போடுவதற்காக பா.ஜ.கவினர் சென்ற போது அங்கே குவிக்கப்பட்டிருந்த போலீஸôர் அவர்களை தடுத்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதையடுத்து பெயர்ப் பலகைக்கு கறுப்பு மை போட்டு அழிக்க முயன்றனர்.அதையும் போலீஸார் தடுத்ததால் இரு தரப்புக்கும் இடையே மோதல் மூளும் சூழல் உருவானது. அப்போது அங்கிருந்த போலீஸார், பத்திரிகையாளர்கள் மீது கறுப்பு மை சிதறியது.பா.ஜ.க. இளைஞரணி போராட்டத்தால் வேலைவாய்ப்பு துறை வளாகம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...