ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

ஆபாசப்பட விவகாரம்: ஆசிரியர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

புதுச்சேரி அருகே அரும்பார்த்தபுரம் அரசுப் பள்ளியில் ஆபாச படம் காண்பித்த ஆசிரியர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி மாநில மாணவர்கள் மற்றும் பெற்றோர் நலச்சங்கம் கோரியுள்ளது.

News image
Updated On :30 நவம்பர் 2013, 6:51 am

சுஜித்குமார்

புதுச்சேரி அருகே அரும்பார்த்தபுரம் அரசுப் பள்ளியில் ஆபாச படம் காண்பித்த ஆசிரியர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி மாநில மாணவர்கள் மற்றும் பெற்றோர் நலச்சங்கம் கோரியுள்ளது.

இததொடர்பாக அதன் தலைவர் ராஜ்பவன் பாலா வெளியிட்ட அறிக்கை:

புதுவை மாநில அரசு தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளையும் கொண்டு வர திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. பள்ளிகளுக்கு இணையதள வசதியுடன் கணியும் உள்ளது.

மாணவர்களுக்கு தேவையான தகவல்களை பெற வேண்டும் என்பதற்காக இத்தகைய வசதி செய்யப்பட்டுள்ளது. பெரும்பான்மையான பள்ளி ஆசிரியர்கள் இதன் மூலம் மாணவர்களுக்கு உண்மையாக பாடங்களை கற்பித்து வருகின்றனர்.

ஆனால் அரும்பார்த்தபுரம் பள்ளி ஆசிரியர்கள் மாணவிகளுக்கு ஆபாசப்படம் காண்பித்தது போன்று சிலர் தகாத செயலில் ஈடுபடுகின்றனர். அரும்பார்த்தபுரம் பள்ளி ஆசிரியர்கள் மூவரை மாணவர்களின் பெற்றோர் நடத்திய போராட்டத்தால் இடமாற்றம் செய்தனர்.

பின்னர் கல்வித்துறை அமைச்சர் தியாகராஜன் தலையிட்டதால் இடைநீக்கம் செய்துள்ளனர். ஆபாசப் படம் காண்பித்த ஆசிரியர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 2000-ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டியவர்கள்.

மாணவியரின் பெற்றோரிடம் புகார் பெற்று போலீஸாரைக் கொண்டு அந்தஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்.

அப்போது தான் வருங்காலத்தில் ஆசிரியர்கள் இதுபோன்ற கீழான செயல்களில் ஈடுபட மாட்டார்கள் என்றார் பாலா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.