விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஸ்ரீவிலி.யில் வருவாய் ஆய்வாளரை டிராக்டர் ஏற்றி கொலை செய்ய முயற்சி: ஒருவர் மீது வழக்கு

அதனை ஓட்டி வந்த தங்கமாரி, அதிவேகமாக டிராக்டரை ஓட்டி, காளிதாஸை ஏற்றி கொலை செய்ய முயன்றுள்ளார்.

Updated On :2 அக்டோபர் 2013, 4:17 am

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மணல் திருடி வந்த டிராக்டரை நிறுத்த முயன்ற வருவாய் ஆய்வாளரை டிராக்டரை ஏற்றி கொலை செய்ய முயன்ற நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

மல்லி வருவாய் ஆய்வாளர் காளிதாஸ் (45), திருவண்ணாமலை நடைபாதை ஓடை மயானம் அருகே தனது குழுவினருடன் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது திருட்டுத்தனமாக மணல் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்த வருவாய் ஆய்வாளர் காளிதாஸ் முற்பட்டுள்ளார். அதனை ஓட்டி வந்த தங்கமாரி, அதிவேகமாக டிராக்டரை ஓட்டி, காளிதாஸை ஏற்றி கொலை செய்ய முயன்றுள்ளார்.

அதிர்ஷ்டவசமாக அவர் சற்று ஒதுங்கிக் கொண்டதால் உயிர் பிழைத்தார். இது குறித்து காளிதாஸ், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து தங்கமாரியையும், டிராக்டரையும் தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.