முல்லைத்தீவில் தொடரும் கடத்தல் சம்பவங்களால் மக்கள் பெரும் பீதிக்குள்ளாகியுள்ளனர்
இலங்கையின் வட பகுதியில் உள்ள முல்லைத் தீவில் பச்சைநிற வாகனத்தில் வந்த ஆயுதம் தாங்கிய குழுவினரால் பாடசாலைச் சிறுவன் ஒருவனும் பெண் ஒருவரும் கடத்தப்பட்டார்கள்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட இந்த இரண்டு பேரும் பின்னர் விடுவிக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .
முல்லைத்தீவு வண்ணாங்குளம் பகுதியிலுள்ள தனியார் கல்வி நிலையத்துக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது கடந்த 30 ஆம் தேதி பச்சை நிற வாகனம் ஒன்றில் வந்த குழுவினரால் ஜெகநாதன் கவிஞன் என்ற சிறுவன் கடத்தப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அன்றைய தினம் இரவு 6 மணியளவில் கொக்கிளாய் கருநாட்டுக் கேணிப் பகுதியில் இவர் வாகனத்தில் இருந்து தள்ளிவிடப்பட்டுள்ளார். அப்போது அந்த தெருவில் வந்த ஒருவரால் மீட்கப்பட்டு சிறுவன் கவிஞன் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
வாகனத்தில் வந்த ஆயுதம் தாங்கிய அடையாளம் தெரியாதவர்களால் சிறுவன் கடத்தப்பட்டு கை, கால்கள் கட்டப்பட்டு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட போது அந்த வாகனத்தில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரும் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் வாயில் துணி அடைக்கப்பட்டு உள்ளே இருந்ததாகவும் அந்தச் சிறுவன் தெரிவித்துள்ளான்
இதேபோன்று வற்றாப்பளை பகுதியிலுள்ள குடும்பப் பெண் ஒருவரும் அன்றையதினம் பச்சை நிற வேனில் கடத்தப்பட்டுள்ளதாக போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தாயான சுபாஷினி என்ற பெண்தான் கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட இந்தச் சிறுவனிடம் பல்வேறு தரப்பினர்கள் தொடர்பிலும் விசாரிக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் சிறுவன் வாகனத்திலிருந்து தூக்கி எறியப்பட்டதாகவும் தெரிய வருகிறது
இதேவேளை கடத்தப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணும் விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிகின்றன.
வெள்ளை வேன் மூலம் கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்கள் இன்னமும் வீடு திரும்பாத நிலையில் புதிதாக 'பச்சை வேன் கடத்தல்' இன்னும் எத்தனை ஆயிரம் பேர்களை இலங்கையில் தமிழர் வாழும் பிரதேசங்களில் இருந்து காணாமல் போகச் செய்யுமோ என்ற பீதி இலங்கையில் உள்ள தமிழர்களிடையே எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: காரைக்குடி செல்லப்பன் வித்யாமந்திா் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி!

மானாமதுரை திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் ராஜகண்ணப்பன் பிரசாரம்

அதிமுக வெற்றி பெற்றால் தமிழகம் வளா்ச்சி பெறும்: ஸ்ரீதா் வாண்டையாா்
வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


