/

பள்ளியில் அடிப்படை வசதி கோரி மாணவர்கள் சாலை மறியல்

திருக்கோவிலூர் அருகே காட்டுப்பையூர் என்ற இடத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உடனடியாக ஏற்படுத்தித் தரவேண்டும்

News image
Updated On :7 அக்டோபர் 2013, 5:06 am

ச.​ கார்த்​தி​கே​யன்

திருக்கோவிலூர் அருகே காட்டுப்பையூர் என்ற இடத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உடனடியாக ஏற்படுத்தித் தரவேண்டும் என்றும், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தியும், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீஸார் விரைந்து வந்து, பள்ளி நிர்வாகிகளிடமும் மாணவர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தி சாலைமறியலைக் கைவிடச் செய்தனர்.

இதனால் கடலூர்- சித்தூர் சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.