தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மணல் குவாரியை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

பண்ருட்டி வட்டம், புலவனூர் கிராமத்தில் உள்ள தென்பெண்ணையாற்றில் மணல் குவாரி இயங்கி வருகிறது. நாள் ஒன்றுக்கு இங்கிருந்து ஆயிரக்கணக்கான லாரிகளில் மணல் எடுத்து செல்லப்படுகிறது

News image
Updated On :7 அக்டோபர் 2013, 10:46 am

சீனிவாசன்

புலவனூர் தென்பெண்ணை ஆற்றில் மணல் எடுக்கக் கூடாது என 75-ம்க்கும் மேற்பட்ட கிராம மக்கள் லாரிகளை முற்றுகையிட்டு திங்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

பண்ருட்டி வட்டம், புலவனூர் கிராமத்தில் உள்ள தென்பெண்ணையாற்றில் மணல் குவாரி இயங்கி வருகிறது. நாள் ஒன்றுக்கு இங்கிருந்து ஆயிரக்கணக்கான லாரிகளில் மணல் எடுத்து செல்லப்படுகிறது.இங்குள்ள சுடுகாடு அருகே அரசு விதி முறைகளை மீறி மணல் எடுக்கப்படுவதாகவும்,  மணல் லாரிகள் செல்ல சாலை அமைக்கப்பட்டதால் சுடுகாடு சேதம் அடைவதாகவும், லாரி ஓட்டுனர்கள் மற்றும் கிõளினர்கள் குடித்து விட்டு கும்மாளம் போடுவதாலும், மரவள்ளி, கரும்பு உள்ளிட்ட பயிர்களை பிடுங்கியும், உடைத்து சேதம்படுத்துவதால் மகசூல் பாதிக்கப்படுவதாக கூறியவர்கள், பெண்கள் வயல் வெளி வேலைக்கு செல்ல முடியவில்லை என கூறி குவாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பண்ருட்டி ஆய்வாளர் சிவசுப்பு, பொதுமக்களை சமரசப்படுத்தி அனுப்பி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.