கடந்த வாரம் கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த நான்கு படகு உள்பட 20 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது. அவர்களின் காவல் இன்றுடன் முடிவடைந்தது.இதையடுத்து அவர்கள் கடற்படை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களின் காவலை அக்டோபர் 21-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கொழும்பு கடற்படை தளபதி வலியுறுத்தினார்.இதனையடுத்து மீனவர்கள் 20 பேரும் இன்று பிற்பகல் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது4 படகுகள் உள்பட 20 மீனவர்களை விடுதலை செய்வதாக நீதிபதி ஆனந்தி கனகரத்னம் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, ஓரிரு நாள்களில் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருட்டு குறித்த விடியோ ‘தூத் சோா்’ கும்பலைச் சோ்ந்த 2 போ் கைது
ரெளடி கும்பலைச் சோ்ந்தவா் ஆயுதத்துடன் கைது

பொறியியல் பணி: கோவை - ஷொரணூா் ரயில் ரத்து

சாத்தூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறாா் நயினாா் நாகேந்திரன்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


