தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மனைவி வெட்டி கொலை: கணவன் தற்கொலை முயற்சி

திண்டிவனம் அடுத்த பட்டணம் கிராமத்தை சேர்நதவர் எழிலப்பன்(42).கூலி தொழிலாளியான இவருக்கு விமலா(40) என்ற மனைவியும் விஜி என்ற மகளும் உள்ளனர்.எழிலப்பனுக்கும் அவரது மனைவிக்கும்

News image
Updated On :7 அக்டோபர் 2013, 12:55 pm

சீனிவாசன்

திண்டிவனம் அருகே மனைவியை வெட்டி கொன்ற கணவன் தனது கழுத்தை அறுத்து  தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

திண்டிவனம் அடுத்த பட்டணம் கிராமத்தை சேர்நதவர் எழிலப்பன்(42).கூலி தொழிலாளியான இவருக்கு விமலா(40) என்ற மனைவியும் விஜி என்ற மகளும் உள்ளனர்.எழிலப்பனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது.இந்நிலையில் ஞாயிற்றுகிழமை இரவு எழிலப்பன் தனது மனைவியை அரிவாளால் வெட்டி உள்ளார்.இதில் சம்பவ இடத்திலேய் விமலா இறந்து விட்டார்.இதனை கண்ட எழிலப்பன் பயந்து போய் தனது கழுத்தை தானே அரிவாளால் அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.அப்போது அவர் அலறிய சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் அங்கிருந்து அவர் புதுவை ஜிம்பர் மருத்துமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.ரோசனை போலீஸார் எழிலப்பனின் வீட்டில் இருந்த விமலாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த கொலை குறித்து வழக்கு பதிóந்துள்ள போலீஸார் வசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.