பாளை.யில் சட்டக் கல்லூரி மாணவர்கள் மறியல்

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி பாளையங்கோட்டையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
Updated on
1 min read

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி பாளையங்கோட்டையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காமன்வெல்த் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் பங்கேற்கும் வகையிலான மாநாடு இலங்கையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இலங்கையில் மாநாடு நடைபெற்றால் இந்தியா புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி பாளை. சட்டக் கல்லூரி மாணவர்கள் செவ்வாய்க்கிழமை திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் மீரான், சுந்தர் ஆகியோரது தலைமையில் கல்லூரி வாயில் முன்பாக பிற்பகலில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த பாளையங்கோட்டை போலீஸாரும், சட்டக் கல்லூரி முதல்வர் எபினேசர் ஆகியோர், மாணவர்களுடன் பேசினர். மாணவர்களின் கோரிக்கையை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும், எதிர்ப்பை பதிவு செய்திருப்பதால் போராட்டத்தை கைவிட வேண்டும் எனக் கோரினர். மேலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதால் போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். இதையடுத்து மாணவர்களின் மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. 30 நிமிடங்கள் நடைபற்ற இந்தப் போராட்டத்தால் அப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com