கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 மாத காலமாக மாவட்ட நிலஅளவை பதிவேடு துறை உதவி இயக்குநர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் பட்டா மற்றும் பட்டா பெயர் மாற்றம் வழங்குவதில் முறைகேடுகள் நடைபெறுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
கடலூர் மாவட்ட நில அளவை பதிவேடு துறை உதவி இயக்குநர் பணியிடம் கடந்த இருமாதமாக காலியாக உள்ளதால் விழுப்புரம் மாவட்ட உதவிஇயக்குநர் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். இதனால் நிலஅளவை பதிவேட்டு துறையில் பட்டா வழங்குவதில் காலதாமதமும், ஆய்வாளர் பொது இடமாறுதல் செய்யப்படாததால் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கடலூர் மாவட்ட 6 தாலுக்காக்களில் சுமார் 70-க்கும் மேற்பட்ட நில அளவை ஆய்வாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பொது இடமாறுதல் செய்யப்படாததால் 4 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆய்வாளரும் ஒரே இடத்தில் பணியாற்றுவதால் பட்டா வழங்குவதில் முறைகேடுகளும், ஊழலும் அதிகரித்துள்ளது. அனைத்து துறைகளிலும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொது இடமாறுதல் செய்யப்படுவது வழக்கமாகும். ஆனால் நிலைஅளவை உதவிஇயக்குநர் பணியிடம் காலியாக உள்ளதால் கடலூர் மாவட்டத்தில் 4 ஆண்டுகளாக நில அளவை ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்படவில்லை.
சமீபத்தில் விருத்தாசலத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.7ஆயிரம் லஞ்சம் பெற்றதாக நில அளவை ஆய்வாளர் அண்ணாதுரை என்பவரை கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கடலூர் மாவட்ட நிலஅளவை பதிவேட்டு துறை உதவி பணியிடத்தை நிரப்பி, ஆய்வாளர்களுக்கு பொது இடமாறுதல் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே ட்ரோன்: 3 பேர் கைது
சென்னையில் இன்று விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து

சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

