விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே தனது 13 வயது நிரம்பாத குழந்தையை மானபங்கம் செய்த தந்தைக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்டவர் மனச்சஞ்சலமின்றி கல்வி பயிலுவதற்கான உதவிகள் வழங்குவதற்கு அரசின் பரிசீலனைக்காக விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு இத்தீர்ப்பின் நகலினை அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.
ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூர்-மேட்டுப்பட்டி, சமத்துவபுரம் காலனியைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் காளிமுத்து (32). இவர் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தும் தொழில் செய்து வந்தார். இவரது முதல் மனைவி ஈஸ்வரி. இவருக்கு முத்துபாண்டி என்ற மகன் உண்டு. 2-ம் மனைவி தங்கம். இவரது மகள் வள்ளி (13) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வள்ளி, தளவாய்புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
காளிமுத்து, 10.4.2010-ம் தேதி தனது மனைவி தங்கம் மற்றும் மகள் வள்ளியுடன் வீட்டில் இருந்துள்ளார். தங்கத்தை கடைக்கு அனுப்பிவிட்டு, வீட்டின் கதவை உட்புறமாகப் பூட்டிவிட்டு, வள்ளியை முதுகில் கம்பால் அடித்தும், வாயில் துணியை அடைத்து வைத்தும், பாவடை நாடாவை வைத்து இரு கைகளை கட்டியும், ஆடைகளைக் களைந்துவிட்டு வன்புணர்ச்சி செய்தாராம். நடந்த சம்பவத்தை தாயிடமோ, வேறு யாரிடமோ சொன்னால் உன்னையும், உன் அம்மாவையும் கொலை செய்துவிட்டு வேறு எங்காவது கொண்டு போய் புதைத்து விடுவேன். மகளையும் மனைவியையும் காணவில்லை என போலீஸில் சொல்லிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
முழு ஆண்டுத் தேர்வு முடிந்து இரு நாட்கள் கழித்து மாலையில் வீட்டில் இருந்து மனைவியை தண்ணீர் எடுக்க வெளியே அனுப்பிவிட்டு, மகள் வள்ளியை மீண்டு வன்புணர்ச்சி செய்துள்ளார் காளிமுத்து. இது குறித்து தாய் தேவிக்கு தெரியவரவே அவர் ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து காளிமுத்துவைக் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி கே.தேவதாஸ் பரபரப்பான தீர்ப்பை வியாழக்கிழமை வழங்கினார். தீர்ப்பு விவரம்:
தான் பெற்றே ஒரே மகளான 13-வயது சிறுமியை கைகளை கட்டியும், வாயில் துணியால் பொத்தியும் வன்புணர்ச்சி செய்துள்ள நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில், குற்றச் செயலில் ஈடுபட்டவருக்கு குறைந்த தண்டனை வழ்ங்குவது பாதிக்கப்பட்ட மைனர் பெண்ணுக்கும், சமூகத்திற்கும் இளைக்கப்படும் அநீதி என்பதோடு, பகுத்தறிவு கருத்துக்கள் விதைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டில் இதுபோன்ற மன்னிக்க முடியாத காட்டுமிராண்டித் தனமான மிருகங்களை விட கேவலமான குற்றச் செயல்களை எவ்வகையிலும் மன்னிக்க இயலாது என்பதை இந்நீதிமன்றம் கருத்தில் கொள்ளும் போது, இ.த.ச. 376 (கற்பழிப்பு) பிரிவின் கீழான குற்த்திற்கு இந்நீதிமன்றம் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை மட்டுமே தண்டனை வழங்க சடடப்படி அதிகாரம் உள்ளது. எனவே இந் நீதிமன்றத்திற்குரிய உயரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி காளிமுத்துவிற்கு இ.த.ச. 376 பிரிவின் படியான குற்றத்திற்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்குவது மிகவும் அவசியமானது என்றும், இரண்டு முறை வன்புணர்ச்சி செய்து விட்டு இந்தச் சம்பவத்தை வெளியில் சொன்னால் உன்னையும், உன் அம்மாவையும் கொலை செய்து புதைத்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளதால், காளிமுத்துவிற்கு இ.த.ச. 502 பாகம் 2-ன் படியான குற்றத்திற்கும் அதிகபட்ச தண்டனையாக 7 வருடங்கள் கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்குவதோடு, இரு பிரிவுகளின்படியான தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிடாமல் ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க உத்தரவிடுவதே, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படியாக பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும், சமூகத்திற்கும் எதிரியால் இழைக்கப்பட்ட அநீதியை ஓரளவு சரிக்கட்டலாம் என்று இந்நீதிமன்றம் முடிவு செய்கிறது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்பது ஒரு சமூக அவலமாக சித்தரிக்கப்படும் இத் தருணத்தில், 13 வயது நிரம்பாத நிலையில் வள்ளி தனது தந்தையால் ஏற்படுத்தப்பட்ட சமூக அவலத்தை எதிர்த்து நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் ஏறியுள்ளார். அவருக்கு ஏற்பட்ட இந்த சமூக அவலத்தை இந்நீதிமன்றத்திற்குள்ள அதிகாரத்தின்படி எதிரிக்கு தண்டனை வழங்குவதால் மட்டுமே துடைக்கப்பட்டு விடுவதாக இந்நீதிமன்றம் கருதவில்லை. இதுபோன்ற சமூக அவலங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு தனிக் கவனம் செலுத்தி அவரது வாழ்வில் ஒளியேற்ற முயலுவதே நியாமானதும், அவசியமானதும், இத்தருணத்தில் தேவையானதுமாக இந்நீதிமன்றம் கருதுகிறது. எனவே வள்ளிக்கு ஏற்பட்ட சமூக அவலத்தை தீர்க்கும் வகையிலும், அவரது எதிர்கால வாழ்வினை இயல்பானதாக்கும் வகையிலும் வள்ளிக்கு உரிய ஆலோசனைகளும், அறிவுரைகளும் வழங்கி அவர் தொடர்ந்து மனச்சஞ்சலமின்றி கல்வி பயிலுவதற்கான உதவிகளும் வழங்குவதற்கு அரசின் பரிசீலனைக்காக விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு இத்தீர்ப்பின் நகலினை அனுப்பி வைக்க உத்தரவிடப்படுகிறது. மேலும் இவ் வழக்கினை துரிதமாக பதிவு செய்து புலன் விசாரணையை நேர்த்தியாக மேற்கொண்டு, நீதிமன்ற விசாரணை வரையிலும் வழக்கினை சமூக அக்கறையோடு வழிநடத்தி சட்டப்படியான கடமையை செவ்வனே செய்து முடித்துள்ள ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினரையும் இந்நீதிமன்றம் பாராட்டுகிறது.
இறுதியாக காளிமுத்துவிற்கு இ.த.ச. 376 (கற்பழிப்பு) பிரிவிலான குற்றத்திற்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.3 ஆயிரம் அபராதமும், இ.த.ச. 506 பாகம் 2 (கொலை மிரட்டல் விடுத்தல்) பிரிவிலான குற்றத்திற்கு 7 ஆண்டுகள் கடுங்கால் சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி கே.தேவதாஸ் தீர்ப்புக் கூறினார். தண்டனைகளை தனித்தனியாக ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பிளஸ்-2 பொதுத்தோ்வு: அரியலூரில் 8,673 மாணவா்கள் எழுதுகின்றனா்
நெல் கொள்முதல் செய்ய லஞ்சம்: எழுத்தா், சுமை தொழிலாளி கைது

12 ஆண்டுகளுக்குப்பின் பாதாள அறையிலிருந்து வெளியே வந்தாா் அத்திவரதா்

தாயுமானவா் திட்டத்தில் மாா்ச் 2, 3, 4-இல் வீடுதேடி ரேஷன் பொருள்கள் விநியோகம்
வீடியோக்கள்

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

